தாயே நீ..!

 


பத்து திங்கள் 

எனை சுமந்து - பேசியும் புரியாத 

உறவுகள் மத்தியில்
பேசாமல் என்னை புரிந்து கொண்ட 

உறவு நீ!
அந்த இறைவனுக்கே 

இணையாய் பூமியில்

உதித்த தெய்வம் நீ!
போலியான இவ் உலகில் 

கலப்படம் அற்ற 

செல்வம் நீ!

அன்பு என்ற இலக்கணத்தின் 

முழு அர்த்தம் நீ!
எனை சுமந்த உன்னை
நான் சுமக்க இன்னொரு 

ஜென்மம் என்ற வரம் 

வேண்டும் தாயே...!

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்