போதை

போதை
போதை 


 

என் பொற்கரங்களில் 

உன்னை ஏந்தி – உன்னை 

வெளியில் வராமல் பாதுகாத்து 

இருக்கும் புதையலின் கதவை திறந்து

உணவில் உப்பை போடும் - அளவை போல

அதில் நீரை ஊற்றி

சேர்க்க வேண்டிய கலவைகளை சேர்த்து

குடித்து உடனே

பலநாள் ஊரவைத்து செய்த பதமான

ஊறுகாவை நக்கினால்

அடடா! 

இறைவன் கொடுப்பது என்ன

சொர்க்கம்..!

இதல்லவோ ஆத்மார்த்த சொர்க்கம்...!


என்னுடைய அகராதியிலையே அடிமை 

என்ற பெயரிற்கு இடமில்லை - இன்று

அடிமை என்றாலே உன்னை

விட்டால் நினைவு வருவது வேறு எது?


நாளெல்லாம் மனிதர்களின் - மனம்

பல சோகத்தை நினைக்கும் 

அதெல்லாம் மறப்பதற்று தானே

மனம் உன்னை நினைக்கும்...!


பல கலைநய விடயங்கள் இருக்கு

என்னிடம் 

இருந்தும் தொலைகிறேன் 

உன்னிடம்..!


அன்று அரசர்களே அடிந்து மடிந்தது

உன்னால் தான் -இன்று 

உன்னை அழிக்க கூட்டமா?


நன்கு தேடினால் தெரியும்

அந்த கூட்டமே – உன்னை

ருசிக்காமல் இருக்காது என்று..!

உன் பற்று காரணமாகத் தான் - எனக்கு

உன்னுடைய பட்டம் எனக்கு சூட்டப்பட்டுள்ளது..

அடிக்கடி கேட்கிறேன் - என்னுடைய பெயரில்

உன்னுடைய பரஸ்பர தொடர்பை..!


இவள் - மது சந்ரன் 












Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்