![]() |
தொலையாமல் இருந்த நம் சந்தோசத்தை
தொலைத்து சென்றது வறுமை
வார்தையில் கூறமுடியாது இந்த நொடி
மானிட வயிற்றில் புரிகின்றது
காசும் இன்றி கண்ணீரும் இன்றி
கவிழ்ந்த நம் கற்பை மீட்க எவருமுன்டோ?
கடன் எனும் காரிருளை வாங்கி
வட்டி எனும் மழையில் நனையும் எம் குழாம்
தேய்ந்த போனது தேகம் மாய்ந்தது மானிட மேகம்
அடிப்படை தேவையின்றி அழியுது எம் குழாம்
வறுமையில் வாடுது வளர்ச்சியின்றி
ஊதிய உயர்வோ ஆயிரம் வாழ்க்கை செலவோ பலவாயிரம்
பாதையும் இல்லை பார்வையும் இல்லை
பட்டினியால் வாடுது எம் குழாம்
விளைவிக்கும் விவசாயம் இல்லை விண்ணிற்கு செல்லவும் விதி இல்லை
வீழ்ச்சியில் வாடுது பொருளியல் எனும் போராட்டம்!
உதவி எனும் கோட்டில் நின்று
வாழ்வுக்கும் சாவுக்கும் போராடும் எம் குழாம்
கிடைக்கபெற்ற பொருட்கள் கிடைக்காமல் போயிற்று
கிடைக்கின்ற பொருட்களும் பொருட்காட்சியகம் ஆயிற்று
போர் வந்து மாய்ந்திட போற்றி நிற்கும் எம் குழாம்
போதைக்கு பஞ்சமில்லை ஒரு வாய் சோற்றுக்கு வழியில்லை
வாட்டி விட்டு செல்கின்றது வாழ்க்கை எனும் பொருளாதாரம்
பொருளியல் எனும் ஆலமரத்தை அடியோடு சாய்ந்தது ஒர்குழாம்
அக்குழாத்தை அழிக்க பட்டினியால் வாடுது எம் குழாம்
நிலம் எனும் நிஜமும் இல்லை
உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை
மூலதனம் எனும் முத்தும் இல்லை
முயற்சி அற்று நிற்குது எம் பொருளாதாரம்
கடன் எனும் சுமை பாரமாய் இருக்க
அச்சுமை தெரிகின்றது ஏழையின் வயிற்றில்
மறுபடி கிடைக்குமா பண்டைய காலம்
மாற்று வழி இல்லையேல் மாய்ந்திடும் கோலம்
பாதி இல்லை எம்மிடம் மாய்ந்து விட்டால் எவ்விடம்
எங்கு செல்லும் இந்நிலை அறியாது தெரியாது
எம் நிலை எவருக்கும் புரியாது
கல்லாய் இருப்பினும் கல்லுக்குள் ஈரமில்லை
மழையாய் இருப்பினும் மண்வாசனை இல்லை
பொன்னாய் இருப்பினும் பொருளுக்கு ஈடில்லை
விண்ணாய் இருப்பினும் வின்மீன் வெளிச்சம் இல்லை
வறட்சியில் வாடுதே எம் குழாம் நாடெங்கும்!
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்