 |
பென்சில் |
பென்சில்
கற்றுக்கொடுப்பது
வாழ்க்கையில்
ஒன்று தான்..!!
📌கூர்மையாக இரு
இல்லையென்றால் சீவி விடுவார்கள்
வாழ்க்கை என்னும்
வரைபடத்தில்
*சந்தோஷம் என்னும் நதியை
தொலைத்து...
😔😔கவலை என்னும் தீவில்... கரை ஒதுங்கி நிற்கிறேன்...
🚶♀🚶♀ஒரு தனி மரமாக...
சகுனிகள் நிறைந்த உலகில்
" சத்தியத்தை"
மட்டும் வைத்து ஒன்றும் செய்ய முடியாது ...
கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன்,,
இருப்பதே நல்லது.....!!
வலி
இல்லாத வாழ்க்கையும் இல்லை...
வழி இல்லாத வாழ்க்கையும் இல்லை வலிகளை
கடந்து வழிகளை தேடுவோம்.
நல்ல உறவு என்பது
கடிகார முள்ளை போன்றது...
அடிக்கடி சந்தித்துக் கொள்வதில்லை
என்றாலும்,
எப்பொழுதும்
தொடர்பிலேயே இருக்கும்...
வாழ்வில் நாம் முன்னேற வேண்டுமென்றால்....
நாம் விட்டுச் செல்ல வேண்டியது கால் தடங்களை மட்டுமல்ல
ஏளனம், எதிர்பார்ப்பு, அவமானம்,
சில துரோகங்களையும் தான்...!
சில சுவடுகள் மனதில் வடுக்களாக இருந்தால் தான்...
வாழ்வில் நமக்கு சாதிக்கும் வல்லமை வருகிறது..
இன்று நீ நீட்டிய கையை பிடிக்க ஒருவர் இல்லாமல் இருக்கலாம்....
ஆனால் உன் முயற்சியில் எழுந்து நிற்கும் போது எத்தனையோ கைகள் உனக்காக தட்ட காத்து கிடக்கிறது.....💯💯💯
புனித நூல்களெல்லாம் வெட்கப்பட்டன...
தனது பெயரால் நடக்கும் போரில்
தன் அன்புக்குரிய குழந்தையின் அவலக்குரல் கேட்டு...!
உங்களுக்கு எண்ணெய் பெரிது
தங்கம் பெரிது..!
மதம் பெரிது..!
அணு ஆயுதம் பெரிது..!
அவளுக்கு கிழிந்தாலும் எரிந்தாலும்
அவள் பாடசாலை கொண்டுபோகும்
அந்தப்புத்தகம் தான் பெரிது...!
புலனத்தில் அதிகம் பகிரப்படும் கவிதை.( பிரதி )
கடலில் இருக்கும் அத்தனை நீரும்
ஒன்று சேர்ந்தால் கூட ஒரு கப்பலை மூழ்கடிக்க முடியாது...!
கப்பலுக்குள் புகுந்தால் மட்டுமே அது சாத்தியம்....!
வாழ்வில் எந்த பிரச்சினையும் உங்களை பாதிக்கவே முடியாது ...
**நீங்கள் அனுமதிக்கும் வரை...
இனிதாகட்டும்... இரவுகள்
இனிதே கூடட்டும்.... இதயங்கள் பிரிந்த
இமைகள் இணைந்து இணை சேரட்டும்...
கண்கள் முழுவதும் கறுப்பு வெள்ளை
கனவுகள் ஆளட்டும்....
நினைவுகள் அழகாய் கூட
நிஜங்கள் யாவும் மெல்ல மெருகேற...
கற்பனையில் மிதந்து காணாத உலகை
காண காத்திருக்காமல்...
சீக்கிரம் விடையளிப்போம்...விரல்களின் விளையாட்டிற்கும்
அழைபேசிக்கும்....
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்