 |
kavinjan.com |
அம்மா
நான் வாழ்ந்த முதல் வீடு.. தாயின் கருவறை 😌
நான் அமர்ந்த முதல் சிம்மாசனம்... தாயின் மடி😊
நான் தூக்கிய முதல் பை... தாயின் புடவை ☺
நான் போர்த்தி கொண்ட முதல் போர்வை....தாயின் அரவணைப்பு😍
நான் சீவிய முதல் சீப்பு... தாயின் கை விரல்கள்....😌
நான் பாடிய முதல் பாட்டு... அம்மா
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
அன்பு நண்பர்களாக
ஒன்றாக பள்ளி சென்றோம் 📚📚
ஒரே தட்டில் பல கைகள் வைத்து உணவு உண்டோம் 🍽🍱
அம்மா அப்பா வைத்த பெயரை மாற்றி ஆளுக்கொரு அடை மொழிப் பெயர் வைத்து அதிகாரத்துடன் அழைப்போம்☺☺
அடித்த ஆசிரியரை ஆசை தீரத் திட்டித் தீர்த்து மனக்குக்குள்ளே மகிழ்ந்து கொள்வோம்🤭🤭
அழகான ஆனந்தத்தின் மூன்றும் மதியால் ஆல் அசைக்க முடியாத நினைவுகள் இவை😇😇
வார்த்தைகளில் பள்ளி நண்பர்கள் வசந்தம் ❤🩹❤🩹
வாழும் வரை அவர்கள் எனக்குச் சொந்தம்👭👭
என் இதயத்தில் என்றும் நிறைந்திருப்பார்கள் ❤🩹👭👭
என் அன்பு நண்பர்களாக...💙❤🩹🫂......
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
நம்மை மதிப்பவர்களை நாம் தேடி போகலாம்...ஆனால் நம்மை அலட்சியப்படுத்துபவர்களை.. திரும்பி கூட பார்க்க கூடாது
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
எப்படியாவது
கடவுளுடைய
Address ஐ...
கண்டு பிடிச்சு
அவருக்கு phone
வாங்கி குடுத்துடனும்
அப்போது தான்
நம்ம வாழ்க்கையில
விளையாடாம
அவர் பாட்டுக்கு
Game
விளையாடிட்டு
இருப்பாரு.
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
உதடு எவ்வளவு தான்
முயன்றாலும் 🙁
முகம் காட்டி கொடுத்து விடுகிறது 😒
மனதில் உள்ள வேதனைகளை.
உலகில் சிறந்த ஜோடி சிரிப்பும் கண்ணீரும் தான் இரண்டும் அடிக்கடி சந்திப்பதில்லை அப்படி சந்தித்துக்கொண்டால் அது ஓர் அழகிய தருணம்
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
அம்மாவின்
அடி வயிற்று
பிரசவத்
தழும்புகளுக்கு....!!
இணையானவை தான் அப்பாவின் உள்ளங்கை காய்ப்புக்கள்...!!
I LOVE YOU APPA MISS YOU SO MUCH....
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
பெருமை என்பது....
திறமைசாலிக்கு நாம்
கை தட்டுவதில் அல்ல....
அவனையும் நமக்காக கை தட்ட வைப்பது தான்....💯💯
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
பசிக்கும் போது கிடைக்காத உணவும்🙃
பதரிய போது உதவாத உறவும் தேவையற்றவை🙁💯
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
கண்கள் இமைகளை வெறுத்தாலும்;
இமைகள் கண்கள் காப்பதை
நிறுத்துவதே இல்லை....
நரை பூத்து வெண்மை குடி கொள்ள
தொடங்குகையில் தான் அந்த
இமைகளின் அருமை
கண்களுக்கு தெரிகிறது..
#அந்த இமைகளுக்கு இந்த கண்கள் கலங்கி விடக் கூடாது என்பதை தவிர
எந்த உயர்ந்த பட்ச இலட்சியங்களும்
இருந்ததே இல்லை......;
என் அன்னையை போல....
LOVE YOU SO MUCH AMMA ....
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
சரியான ஒன்றை,
சரியான நேரத்தில் சரியான
நபரிடம் பேச வில்லையெனில்,
தேவையில்லாத மன
குழப்பத்திற்கு ஆளாவோம்..!!
துடைக்க யாரும் இல்லாத போது🙁
எல்லோருக்கும் முதல் வரும் கண்ணீர் கூட
துரோகிதான்
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
உரிமைக்காக சிலர் தேவைக்காக சிலர் இவர்களுக்கு இடையே தான் நம் வாழ்க்கை பயணம்..
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
🥺வெறுக்கும் கண்கள் வேடிக்கை பார்க்கட்டும்....
தனித்து நின்றாலும்
தத்துவமாய்
💪 நிமிர்ந்து நில்...!! 💯💯
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
தூரத்தில் இருந்து பாத்துவிட்டு ஒருவர் சந்தோஷமாக இருக்கிறார் என்று கூரமுடியாது தூரத்தில் இருந்தும் பார்க்கும் போது மெழுவர்த்தியின் ஒளி மட்டுமே நம் கண்களுக்கு தெரியும் அருகில் போய் பார்த்தால்தான் அது உருகி கண்ணீர் வடிப்பது தெரியும் 🥺🕯🕯🕯🥺
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
'இது என்னுடையது ' என்று நினைக்கும் வரை, எதையும் நாம் விட்டுக்கொடுக்க தயாரில்லை...
'எதுவும் என்னுடையது அல்ல ' என்கின்ற பக்குவம் வரும் போது,
விட்டுக் கொடுக்க நம்மிடம் எதுவும் இருப்பதில்லை....
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
கருவறையில் வளர்ந்து கொண்டிருக்கின்றது என
சொல்லி சிரித்தாள்...!!
வளர்பிறையாய் உன் கருவில் வளரும் போதே முழு நிலவாய் நீ என்னை தொட்டு ரசித்தாய்....!!
உள்ளே தள்ளும் உணவு ருசியாக
இருக்க வேண்டும் என்று
நினைக்கும் நாக்கு,
வெளியே தள்ளும் வார்த்தையில் மட்டும் எதையும் நினைப்பதேயில்லை.....💯💯
கடக்கப் போகும்
தெரு பாதையை
கண்டு நீங்கள் தயங்கி
நிற்கும் போது...
கடந்து வந்த
பெரும் பாதையை
ஒருமுறை
நினைத்து பாருங்கள்....
வெற்றி உங்கள் வசமாகும்....
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
எதிலும்
அளவோடு இருந்தால்...
அவதிபடவும்
தேவையில்லை
அவமானப்படவும்
தேவையில்லை....💯
சரி செய்ய முடியாத....
சகித்துக்கொள்ள முடியாத ....
நேரத்தில் நமக்கு நாமே
பொய்யாக சொல்லும்
ஆறுதல் வார்த்தை.....
"இதுவும் கடந்து போகும்"
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
எனக்கு....( நான்)
இந்த உலகத்தையே
வென்றிட வேண்டும்..!!
ஊர் உலகெல்லாம்
என் பெயர் சொல்ல வேண்டும்..!!
என்னை மிஞ்ச எவரும்
இங்கே
இல்லையென்ற நிலை
வேண்டும்...!!
என்றெல்லாம்
பேராசையில்லை...!!
தினம் காலையில்
தளவாடி பார்க்கையில்
என் விம்பம்
என் முகத்தை பிரதிபலிக்க வேண்டும்..!!
என்னை நான்
எதிர் கொள்ளும்
தன்னம்பிக்கை மனம்
வேண்டும்..!!
எங்கோ ஓடிச் சென்று
ஒழிந்துக் கொள்ளாது
எத்தனை முறை
தோற்றாலும்
மீண்டும் எழுந்து
எந்த தடைகளையும்
எதிர் கொள்ளும்
தைரியம் வேண்டும்..!!
தளவாடி முன் நிற்பவன்
என்னோடு உரையாடி
உன்னால் முடியும்
என்கின்ற
நம்பிக்கை வார்த்தைகள்
உரைத்திட வேண்டும்
யார் யார் இருப்பினும்
யார் யார் விலகினும்
நான் நானாய் இருந்தால் போதும்...
வேண்டாம் என்று தூக்கி எறியப்பட்ட விதை கூட மரமாக வளர்ந்து விடுகிறது ...
உன்னை வேண்டாம் என்று தூக்கி எறிந்தவர் மத்தியில் இருந்து எழுந்து வா..!!
வாழ்க்கையில் உன்னை வெல்ல யாரும் இல்லை...!!
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
விதையை
பார்த்து
மரம்
இளக்காரமாக
சிரித்தது
விழுந்து விழுந்து போகிறாயே என்று....
விதை
சொன்னது
நான்
விழுந்ததால் தான்
நீ
எழுந்து
நிற்கிறாய்
என்று..!!
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
அடுத்து என்ன நடக்கப்போகுதுனு தெரியாத அளவு ஆச்சரியங்கள் நிறைந்தது தான்
இந்த வாழ்க்கை..!
மெது மெதுவா நகருற நாட்கள்
ஒரு நாலு, அஞ்சு வருசம் கழிச்சி
இதே மாதிரி ஒரு நாள்ல போய் நிக்கிறப்போ நிறைய விசயங்கள் மாறி இருக்கும்..
நம்மல நேசிச்சவங்க நமக்கானவங்களாகி இருப்பாங்க..
சில நேரங்கள்ல நாம நேசிச்சவங்க நமக்கு கிடைக்காம போய் இருப்பாங்க..
யாருனே தெரியாதவங்க அப்போ நம்ம பக்கத்துல இருப்பாங்க..
நம்மக்கூடவே இருந்தவங்க யாரோ ஆகி இருப்பாங்க..
எதிர்ப்பாக்காத இடங்கள்ல கஷ்டங்கள், பிரச்சனைகள் வந்து வந்து போய் இருக்கும்..
எது எப்பிடி இருந்தாலும் எல்லாத்தையும் தாண்டி நாம போய் இருப்போம்..
சில இடங்கள்ல ரொம்ப Tired-ah feel பண்ணி இருப்போம்..
சில இடங்கள்ல இத்தோட முடிச்சிக்கலாமானு நினைச்சி இருப்போம்..
ஆனா எல்லாத்தையும் கடந்து வந்து பாக்குறப்போ
இந்த சின்ன சின்ன விசயங்களுக்காகவா
அவ்வளோ Feel பண்ணோம்னு தோணும்..
அடிக்கடி பாத்து, பழகின விசயங்களோட நாம Easy-ah connect ஆகிருவோம்
ஏனா அது எங்களுக்கு ரொம்ப பரீட்சயமான ஒன்னாகி நாம அதுக்கு பழக்கப்பட்டு இருப்போம்..
வாழ்க்கைல இனி இல்லன்றளவு பிரச்சனைகள், கஷ்டங்கள பாத்து பாத்து அதுக்கும் நாம பழக்கப்பட்டு இருப்போம்..
அதுக்கு அப்பறம் எந்த அளவு பிரச்சனைகள் வந்தாலும் அத face பண்ணிக்கிற அளவு நாம தயாராகி இருப்போம்..❤
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
ஒரு_தந்தை_தனது இறுதிக் காலத்தில் மகனை அழைத்து சொன்னார்.
மகனே! இது உனது பூட்டனின் கைக்கடிகாரம், 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது, நான் இதனை உனக்கு தருவதற்கு முன்னால், நீ கடைவீதிக்கு சென்று கைக்கடிகார கடையில், நான் இதனை விற்கப் போகிறேன்,எவ்வளவு விலை மதிப்பீர்கள் என்று கேட்டுப்பார் என்றார், அவன் போய் கேட்டு விட்டு, தந்தையிடம்
இது பழையது என்பதால் 5 டாலர்கள் மாத்திரமே தரமுடியும் என்றனர்.
தந்தை, பழைய பொருட்கள் விற்கும் Antique கடைக்குப் போய் கேட்டுப் பார் என்றார்.
அவன் போய் கேட்டு விட்டு,தந்தையிடம், இதற்கு 5000 டாலர் தரமுடியும் என்றனர்,
தந்தை, இதனை நூதனசாலைக்கு museum கொண்டு சென்று விலையை கேட்டுப் பார் என்றார்,
அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம், நான் அங்கு போன போது, அவர்கள் அதனை பரிசோதனைக்குற்படுத்த ஒரு வரை வரவழைத்து பரிசோதித்துவிட்டு, என்னிடம் இதற்கான பெறுமதி ஒரு மில்லியன் டாலர் என்றனர்.
தந்தை, மகனைப் பார்த்து, மகனே! சரியான இடமே உனது அந்தஸ்தை சரியாக மதிப்பிடும், எனவே, பிழையான இடத்தில் நீ உன்னை நிருத்திவிட்டு, உன்னை மதிக்கவில்லை என்று நீ கோபப்படுவதில் அர்த்தம் இல்லை என்றார்.
உனது அந்தஸ்தை அறிந்தவனே உன்னை கண்ணியப்படுத்துவான்
உனக்கு தகுதி இல்லாத இடத்தில் நீ இருக்காதே💔🤝
தவறிழைத்த பட்சத்தில் வயது வித்தியாசம் பாராது தயங்காமல் மன்னிப்பு கேள்....
தவறிழைக்கா பட்சத்தில் வயது வித்தியாசம் பாராமல் எதிர்த்து பேசு...
இரண்டும் இடத்தில் நீ அமைதி காத்தால் உன்னையே குற்றவாளியாக்கி விடும் இவ்வுலகம் என்பதை உணர்ந்து கொள்...!!
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
குற்றம் சொல்ல
ஆயிரம் காரணம் இருக்கலாம்...!!
மன்னிக்க
ஒரே காரணம்
அன்பு மட்டும் தான்...!!
இனிய காலை வணக்கம் உறவுகளே !!
யாருக்கு தேவைப்படுகிறோமோ..
அவர்களின் தேவையாக இருப்பது எளிது தான்...
என்ன ஒன்று அதற்கு
பழகி விட்டால் நம் தேவைகள் என்னவென்பதே நாளடைவில் மறந்துவிடும்....
அவ்வளவே....💯💯
உரிமை கிடைக்கும்
இடத்தில் உறவாக நின்று
விடுங்கள் !
உரிமை கிடைக்காத
இடத்தில் ஓரமாக கூட
நின்று விடாதீர்கள்🤍 !
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
மனசு சரியில்லை
என்று சொல்லுவது தவறு ...
மனசை
நாம் சரியாக வைக்கவில்லை என்பதே சரி ...
எதையும்
மனம் விட்டு பேசாத வரை....
இங்கு எல்லாமே மன அழுத்தம் தான்.....💯💯💯
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
இதயம் ❤
தனிமை தண்டனை என்று அனைவரும் சொல்வார்கள் ...!
ஆனால் எனக்கு தனிமை இறைவன் கொடுத்த வரம்...!
ஏன் என்றால் நான் உன்னுடன் கற்பனையில் உண்டு வாழ கிடைத்த சந்தர்பம் தான் என் தனிமை...!
என் உதடுகள் என் மனதிடம் மௌனமாய் பேசும் ஒரு மொழி தான் தனிமை....!
என் தனிமையில் உன்னை தவிர வேறு யாரும் நுழையாத வரம் வேண்டி தவம் இருக்கிறேன்.
- இப்படிக்கு இதயம்♥🦋
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
நாம் வாழும் வரை நம்மை
யாரும் #வெறுக்க கூடாது
#வாழ்ந்து முடித்த பின்பு
நம்மை யாரும் #மறக்கக்
கூடாது...❣❣
மனம் சொல்லும் #வழியில்
நீ செல்லாமல்🥳🥳
நீ சொல்லும் #வழியில் உன்
மனதை செலுத்தி #வாழ்ந்திடு...❣❣
வாழ்க்கையில நாம கொஞ்சம்
காலம் தான் 😁
விளையாடுவோம்...
மீதி காலம் முழுக்க வாழ்க்கை➰➰
நம்மோட விளையாடும்...😄😄
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
தோள் கொடுப்பாள்
தோழி அல்ல ,
மெய் அன்பு தந்தாள்
தாயும் அல்ல .
உரிமையாய் உறவாடும்
என் உயிரின் வரவு நீ ,
என் உடன்பிறவாத
உன்னத உறவும் நீ !
தங்கையும் இன்றி ,
தமக்கையும் இன்றி
தன்னந்தனியாய்
தரணியில் நின்றேன் ,
உடன் பிறப்பென்று
ஆண் ஒன்று உண்டு .
உன் போல் உறவாய்
ஒருவரும் இல்லை.
(தெத்துப்பல்) சிரிப்பழகி
திகட்டாமல் பேசிடுவாள் .
முத்துப்பல் புன்னகையால்
முழு அன்பினையும் காட்டிடுவாள் .
சின்ன சின்ன தீம் சொற்கள்
தென்றலாய் வீசிடுவாள் ,
(அரிசிமூட்டை )என்றே எனை
ஆவலாக கூப்பிடுவாள் ...
கள்ளமில்லா அன்பு என்றால்
என்னவென்று நான் அறிந்தேன் .
கள்ளி அவள் அன்பினிலே
கற்கண்டாய் நான் கரைநேதேன் !
அக்கா என நான் அழைக்க
அழைப்புகண்டு மகிழ்ந்திடுவாள் ,
போடி என்றோ சொல்லிவிட்டால்
கொஞ்சும் கோபத்தில் சினந்திடுவாள் .
தவறுகள் நான் செய்தாலும்
தண்டனைகள் தரமாட்டாள் ,
தரமான போதனையால்
என் தவறினையும் திருத்திடுவாள் ...
உயர உயர நான் செல்ல
உளமார வாழ்திடுவாள் ,
என்னில் ஊரு ஏதும் நேர்ந்துவிட்டால்
அவள் உள்ளத்தால் உருகிடுவாள் ...
நிலவொளியின் நிறம்கூட
நிமிடத்தில் மாறிடலாம் ,
நிஜமான நின் அன்பு
நீளும் என்றும் குறையாதே ..
பெண் என்று பெயர் கொண்ட ஒரே ஒரு காரணத்தால்
உன் அனைத்து வலிகளையும்
மனதில் குழி தோண்டிப் புதைத்து
மௌனம் சாதித்து விட்டு
ஊமை என்ற உவர்ப்பான பட்டத்தை
உயிர் உள்ளவரை சுமப்பதை விட
அனைத்திற்கும் பதிலடி கொடுத்து விட்டு
வாயாடி என்ற பட்டத்தை
மன நிறைவோடு ஏற்றுக்கொள்.
ஏனென்றால் நீ வாழ்வது
உன் வாழ்க்கை...
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
தண்ணீரில் நீந்தும் மீனுக்கு தெரியாது.. தனக்கு வரும் இரையால் தான் தன் உயிர் போகும் என்று (அறியாமை)..!😂
மான் எவ்வளவு அழகாக இருந்த போதும்.. புலி அதை ரசித்துப் பார்ப்பதில்லை.. ருசித்தே பார்க்கிறது.. (ஆணவம்)..!😢
தவளை தன் சத்தத்தாலே பாம்புக்கு இரையாகிறது.. (வாய் கொழுப்பு)..!😂
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
நாம் நினைத்தால் நம் பலவீனங்களும் பலமாகும் 💪
✊ ஜப்பானில் பத்து வயதுப் பையன் ஒருவனுக்கு ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது கனவு. ஆனால் அவனுக்கு இடது கை கிடையாது.
👊 கையும் காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது சிம்ம சொப்பனம். கையில்லாத பையன் என்ன செய்வான் ? பல மாஸ்டர்களிடம் போனான். எல்லோரும் அவனை பரிதாபமாய்ப் பார்த்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார்கள்.
🤜 கடைசியில் ஒரு குரு அவனுக்கு ஜூடோ கற்றுத் தர ஒப்புக் கொண்டு, ஒரே ஒரு தாக்குதலை மட்டும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார்.
🤛 நாட்கள், வாரங்கள், மாதங்கள் ஓடின. குரு வேறு எதையும் கற்றுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. பையன் சோர்ந்து போனான்
👊“குருவே! ஜூடோ சேம்பியன் ஆக இந்த ஒரு தாக்குதல் தெரிந்தால் மட்டும் போதாதே. வேறு எதுவும் சொல்லித் தருவீர்களா?” என்று கேட்டான்.
👊“இந்த ஒரே ஒரு தாக்குதலில் நீ வல்லவன் ஆனால் போதும்” என்றார் குரு. பையனும் பயிற்சியைத் தொடர்ந்தான்.
🤜 சாம்பியன்களுக்கான போட்டி ஆரம்பமானது !
✊ முதல் போட்டி- சர்வமும் கற்றுத் தேர்ந்த எதிராளி. ஒரே ஒரு தாக்குதல் மட்டும் தெரிந்த இந்தப் பையன். எதிரே இருப்பவன் பலமுறை சேம்பியன் பட்டம் பெற்றவன்.
🤜 ஒரு கை இல்லாத எதிராளியைப் பார்த்து அவனுக்கு கொஞ்சம் பரிதாபமும், இளக்காரமும். போட்டி ஆரம்பமானது.
எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக பையன் வெற்றி பெற்றான்.
👊 இரண்டாவது போட்டி- அதிலும் அவனுக்கே வெற்றி.
அப்படியே முன்னேறி அரை இறுதிப் போட்டி வரை வந்து அதிலும் போராடி ஜெயித்து விட்டான்.
✊ கடைசிப் போட்டியின் முதல் சுற்றில் பையனை சேம்பியன் அடித்து வீழ்த்தினான்.
👊 பையனின் நிலையைக் கண்டு பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி. போட்டியை நிறுத்திவிடலாமா என்கின்றனர் போட்டி நடத்துபவர்கள். “வேண்டாம், பையன் சண்டையிடட்டும்” என்றார் குரு.
👊 பையன் தனக்குத் தெரிந்த அந்த ஒரே தாக்குதலை பலமாய் நிகழ்த்தினான். எதிராளி வீழ்ந்தான். பையன் சாம்பியனானான். பார்வையாளர்கள் நம்ப முடியாமல் பார்த்தார்கள். அந்தப் பையனுக்கே தனது வெற்றியை நம்ப முடியவில்லை.
✊“குருவே. நான் எப்படி இந்த போட்டியில் வெற்றி பெற்றேன்? அதுவும் ஒரே ஒரு தாக்குதலை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேனே“ என்று கேட்டான்.
👊 புன்னகைத்தபடியே குரு சொன்னார் “உனது வெற்றிக்கு இரண்டு காரணங்கள் -
ஒன்று ஜூடோவிலுள்ள மிகக் கடுமையான ஒரு தாக்குதலை நீ கற்றுத் தேர்ந்திருக்கிறாய்.
✊ இரண்டாவது இந்தத் தாக்குதலைத் தடுக்க வேண்டுமானால் எதிராளிக்கு ஒரே ஒரு வழி தான் உண்டு. உனது இடது கையைப் பிடிக்க வேண்டும். உனக்குத் தான் இடது கை கிடையாதே ! உன்னுடைய அந்த பலவீனம் தான் பலமானதாய் மாறி உன்னை சாம்பியன் ஆக்கியிருக்கிறது !”
👊 குரு சொல்லச் சொல்ல பையன் வியந்தான். தனது பலவீனமே பலமாய் மாறிய அதிசயத்தை நினைத்து நினைத்து ஆனந்தித்தான்.
👊 நமது மனம் திறமைகளின் கடல். அதில் முத்தெடுப்பதும் நத்தையெடுப்பதும் மூச்சடக்கி நாம் முயற்சிப்பதை பொறுத்தது.
🤏நம்முடைய எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும் போதெல்லாம்;
நம்முடைய 👀நிம்மதிகளும், ஆசைகளும் உயிரற்று 🥺இயங்க முடியாமல் போய்விடுகிறது.
......................
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
ஒரு சிறுவன் ஒரு சிறுமியிடம் சொன்னான்: நான் உன் BF என்று...
சிறுமி கேட்டாள்.....
"BF என்றால் என்ன...?"🤔
சிறுவன் சிரித்துவிட்டு பதிலளித் தான் "உனது சிறந்த நண்பன்"
(Best friend)🤗
அவர்கள் பின்னர் காதலிக்கும் போது, அந்த இளைஞன் யுவதியிடம் கூறினான்....
"நான் உன் BF..." என்று
அவள் அவன் தோளில் லேசாக சாய்ந்து கொண்டு வெட்கத்துடன் கேட்டாள்:😄
"BF என்றால் என்ன...?"
அவன் பதிலளித்தான்:
"இது பாய் ஃப்ரெண்ட்..."😄
(Boy friend)
சில வருடங்கள் கழித்து அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள், அழகான குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள், கணவர் மீண்டும் புன்னகைத்து தனது மனைவியிடம் கூறினார்:
"நான் உன் BF..." என்று
மனைவி மெதுவாக கணவனிடம் கேட்டாள்:
"BF என்றால் என்ன...?"🤫
கணவர் அழகான மற்றும் மகிழ்ச்சியான குழந்தைகளைப் பார்த்து பதிலளித்தார்:
"குழந்தையின் அப்பா தான்..."
(Baby's father)🤩
அவர்களுக்கு வயதாகிய போது ஒருநாள் அவர்கள் ஒன்றாக அமர்ந்து முன் சூரிய அஸ்தமனத் தைப் பார்க்கிறார்கள், அவர் தனது மனைவியிடம் கூறுகிறார்:
அன்பே... "நான் உனது BF.." என்று
கிழவி முகத்தில் சுருக்கங்களுடன் சிரித்தாள்:
"BF என்றால் என்ன...?"🥰
முதியவர் மகிழ்ச்சியுடன் புன்னகைத்து ஒரு மர்மமான பதிலைக் கூறினார்......
"என்றைக்கும் உன்னுடன்"
(Be forever)❤ ❤
இறக்கும் தருவாயில் மனைவியிடம் மீண்டும் கூறினார்
"நான் உமது BF..." என்று
வயதான மனைவி சோகமான குரலில் கேட்டாள்.......!!
"BF என்றால் என்ன...??"🤔
முதியவர் பதிலளித்தார்....
"மீண்டு வரேன் bye"😔
(Bye for ever)
கொஞ்ச நாள் கழித்து அந்த மூதாட்டியும் இறந்து போனார். கண்களை மூடுவதற்கு முன், வயதான பெண்மணி முதியவரின் கல்லறையில் கிசுகிசுத்தாள் BF என்று......! 😳
"என்றும் உம் அருகில்"
(Beside for ever)😔😔
வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் ஒரே வார்த்தையின் அர்த்தம் எப்படி மாறுகிறது...!!
ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் அல்லவா.....!!😊 👍
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
பிள்ளைகள் வளரும் சூழல்கள்
🔴 ஆரவாரமான குடும்ப சூழலில் வளரும் குழந்தைகள் உற்சாகத்தையும் தன்னம்பிக்கையை கற்றுக்கொள்கின்றனர்.
🟠 சுமைகள் நிறைந்த குடும்ப சூழலில் வாழும் குழந்தைகள் சகிப்புத்தன்மையை கற்றுக்கொள்கின்றனர்.
🟡 பாராட்டப்படும் குடும்ப சூழலில் வளரும் குழந்தைகள் பாசத்தையும் மனத்திருதியையும் கற்றுக்கொள்கின்றனர்.
🟢 கொடுத்துதவும் சூழலில் வளரும் குழந்தைகள் தாராள மனப்பான்மையை கற்றுக்கொள்கிறனர்.
🔵 நீதி நேர்மையான சூழலில் வளரும் குழந்தைகள் வாய்மையை கற்றுக்கொள்கின்றனர்.
🟣 நியாயமான சூழலில் வளரும் குழந்தைகள் நாணயத்தை கற்றுக்கொள்கின்றனர்.
🟤 உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் சூழலில் வளரும் குழந்தைகள் மரியாதையை கற்றுக்கொள்கின்றனர்.
⚫ விசாரணைகளும் விமர்சனங்களும் நிறைந்த சூழலில் வளரும் குழந்தைகள் பொய் பேசக் கற்றுக்கொள்கின்றனர்.
🔴 வன்முறைகளும் சச்சரவுகளும் நிறைந்த சூழலில் வாழும் குழந்தைகள் முரட்டுத்தனத்தையும் அடாவடித்தனத்தையும் கற்றுக்கொள்கின்றனர்.
🟠 பயந்த சூழலில் வாழும் குழந்தைகள் பலவீனத்தையும் கோழைத்தனத்தையும் கற்றுக்கொள்கின்றனர்.
🟡 குழந்தைகள் தனித்தப்படுத்தப்பட்ட சூழலில் வளரும் போது ஒதுங்கி வாழ கற்றுக்கொள்கின்றனர்.
🟢 கிண்டல் கேலிக்கைகள் செய்யப்படும் சூழலில் வளரும் குழந்தைகள் கூச்ச சுபாவத்தை கற்றுக்கொள்கின்றனர்.
🔵 போட்டி பொறாமைகள் உள்ள சூழலில் வளரும் குழந்தைகள் பொறாமையை கற்றுக்கொள்கின்றனர்.
🟠 அளவுக்கதிக செல்லம் காட்டப்படும் சூழலில் வாழும் குழந்தைகள் தன்னம்பிக்கை இல்லாமல் வாழ கற்றுக்கொள்கின்றனர்.
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
உன்னை வீழ்த்த நினைப்பவர்கள் முன், யாருடைய தயவுமின்றி உன்னால் வாழ முடியும் என்கின்ற மன உறுதி தான்... வாழ்க்கையில் உன்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும்....
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
கடந்து வந்த
பின்பே கண்டு
உணர்கிறேன்
என்னை
கலங்கடித்த
காலமெல்லாம்
கடுமையான
காலம் அல்ல
என் வாழ்வை வடிவமைத்த காலமென்று...
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்